தெரு நாய் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜ வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 10,000க்கும் மேற்பட்டோர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களால் கடிக்கப்படுகின்றனர்.
Advertisement
உள்துறை, சுகாதாரம், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்களுடன் உடனடி கூட்டத்தை கூட்டி, தெருநாய்கள் மேலாண்மை மற்றும் பொது பாதுகாப்பிற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான குழுக்களை அமைத்து, நாய்க்கடி தடுப்பு மற்றும் ரேபிஸ் அபாயங்கள் குறித்து பொது விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement