தமிழ்நாட்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: தமிழ்நாட்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்கள் கடிப்பதால் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால், தமிழ்நாடு முழுவதும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.