தெரு நாய்களை பாதுகாக்க தனி காப்பகம் அமைக்க வேண்டும்: ஐகோர்ட்
06:01 PM Aug 14, 2025 IST
சென்னை: தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன் அவற்றை பாதுகாக்க தனி காப்பகம் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன என சென்னை மாநகராட்சி கால்நடைத் துறை அதிகாரி அறிக்கை அளித்துள்ளார். தோராயமாக கடந்த ஆண்டு 20,000 நாய்க் கடி சம்பவங்கள் நடைபெற்று இருக்கலாம் என தெரிவித்தார்.