தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெருநாய் வழக்கால் நான் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் நகைச்சுவை பேச்சு!

திருவனந்தபுரம்: தெருநாய்கள் தொடர்பான வழக்கு தான் உலக அளவில் எங்களை பிரபலமாக்கிவிட்டது என உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் தெரு நாய்​களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்​பாக குழந்​தைகள் தெரு​நாய் கடி​யில் உயி​ரிழப்​ப​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்சநீதி​மன்ற 2 நீதிப​தி​கள் அமர்​வு, டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெருநாய்​களை பிடித்து காப்​பகங்களில் பராமரிக்க வேண்​டும். அவற்றை மீண்​டும் தெருக்​களில் விடக்​கூ​டாது என்று கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி உத்​தர​விட்​டது. இதற்கு செல்​லப் பிராணி​கள் வளர்ப்​பவர்​கள், சமூக ஆர்​வலர்​கள் பலர் கண்​டனம் தெரி​வித்து போராட்​டங்​கள் நடத்​தினர். நாடு முழு​வதும் இந்த விவ​காரம் பெரும் சர்ச்​சை​யானது.

Advertisement

இது உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி கவாய் கவனத்​துக்கு சென்​றது. இதையடுத்து நீதிபதி விக்​ரம் நாத் தலை​மை​யில் 3 நீதிப​தி​கள் அடங்​கிய அமர்​வுக்கு வழக்கை மாற்றி தலைமை நீதிபதி கவாய் உத்​தர​விட்​டார். இந்த வழக்கை விசா​ரித்து கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி நீதிபதி விக்​ரம் ​நாத் வெளி​யிட்ட தீர்ப்​பில், டெல்லி - என்.சி.ஆர் பகு​தி​களில் பிடிக்​கப்​பட்ட நாய்​களுக்கு தடுப்​பூசி போட்டு பிடித்த இடங்​களி​லேயே விட வேண்​டும். தெருநாய்​களுக்கு பொது​மக்​கள் பொது இடங்​களில் கண்​டிப்​பாக உணவளிக்க கூடாது. தெரு நாய்​களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநக​ராட்சி ஏற்​பாடு செய்ய வேண்​டும். அங்கு ‘நாய்​களுக்கு உணவளிக்​கும் இடம்’ என்ற அறி​விப்பு பலகைகளை வைக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டார். இந்த தீர்ப்பை ஏராள​மானோர் வரவேற்​றனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீதிபதி விக்ரம் நாத் பேசியதாவது; நீண்ட காலமாக எனது வேலைகளுக்காக சிறு வட்டாரத்திற்குள்ளாகவே நான் அறியப்பட்டிருக்கிறேன். ஆனால், தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக, இந்த நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தெருநாய்கள் குறித்த வழக்கு, தன்னை உலகம் முழுவதும் பிரபலமாக்கிவிட்டது. இந்த வழக்கை எனக்கு ஒதுக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு நன்றி செலுத்துகிறேன். இவ்வழக்கில் நாய் பிரியர்களை கடந்து நாய்களும் எனக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கி இருக்கிறது என கருதுகிறேன் என்றார்.

2027ம் ஆண்டில் தலைமை நீதிபதிக்கான வரிசையில் இடம்பெறும் விக்ரம் நாத்தான், தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 11ம் தேதியில் வெளியான உத்தரவை மாற்றியமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement