தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓசூர் அருகே 3 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்: பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை

ஓசூர்: ஓசூர் அருகே வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவனை தெருநாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் பிரதாப். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 3 வயதில் அர்ஜூன் என்ற மகன் உள்ளான். இவர்கள் குடும்பத்துடன் ஓசூரை அடுத்த நாகொண்டபள்ளியில் நடைபெற்று வரும் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக உறவினரின் வீட்டுக்கு வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் சிறுவன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தெருநாய், சிறுவனை கடித்து குதறியது. இதனால் சிறுவன் அலறி துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, தெருநாயை விரட்டியடித்து சிறுவனை மீட்டனர்.

நாய் கடித்ததில் சிறுவன் அர்ஜூனுக்கு தலை, கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு கதறி அழுதான். பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு சுமார் 10 தையல்கள் போடப்பட்டுள்ளது. வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவனை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related News