சூறைக்காற்றால் படகு இல்லம் மீது விழுந்த பெரிய மரங்கள்: படகு இல்லத்தின் மேற்கூரை, கண்ணாடி ஜன்னல் முற்றிலும் சேதம்
நீலகிரி: உதகையில் ராட்சத மரம் விழுந்ததில் தேனிலவு படகு இல்லம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. உதகையில் கடந்த சில நாட்களாகவே மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து மழையின் தாக்கம் குறைந்து சூறைக்காற்று அதிகரித்து உள்ளது. இதில் உதகையில் ராட்சத மரங்கள் விழுந்ததில் தேனிலவு படகு இல்லத்தில் மேற்கூரையில், ஜன்னல்கள் மற்றும் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பலத்த சேதம் அடைந்தது. குறிப்பாக படகு இல்லதை சுற்றி ஏராளமான ராட்சத மரங்கள் உள்ளதால் இந்த மழை காலங்களில் படகு இல்லத்தில் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக தேனிலவு படகு சுற்றியுள்ள அபாயகரமான மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாள்தோறும் இந்த தேனிலவு படகு இல்லம் சுற்றி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இன்று மரம் விழுந்து படகுகள் சேதம் அடைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்ற படகு இல்லமும் மூடப்பட்டுள்ளது, தொடர்ந்து இந்த பகுதியில் இருக்கக்கூடிய மரங்களை சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படாதவாறு மாவட்டம் நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.