பல நாடுகளுக்கு இடையிலான 7 யுத்தங்களை நான் நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
வாஷிங்டன்: பல நாடுகளுக்கு இடையிலான 7 யுத்தங்களை நான் நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி அளித்துள்ளார். போர் என்பதே மனித ஆற்றலையே வீணடிக்கும் மோசமான செயல். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் உறுதி அளித்துள்ளார். போர் சம்பந்தமான எதுவும் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்குமாறு ஹமாஸை கடைசியாக எச்சரித்தார். ட்ரம்ப் தனது அறிக்கையில், தான் வழங்கிய நிபந்தனைகளை இஸ்ரேல் தரப்பு ஏற்றுக்கொண்டதாகவும், ஹமாஸ் அதே முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். "கைதிகள் வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்"
கைதிகள் தாயகம் திரும்ப வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்! இஸ்ரேலியர்கள் எனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள், ஹமாஸ் அவர்களையும் ஏற்க வேண்டிய நேரம் இது."