சென்னையில் திருடுபோன கார்.. பாகிஸ்தான் பார்டரில் மீட்பு
சென்னை: சென்னை அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சர்வீஸ் சென்டரில் விடப்பட்ட சொகுசு கார்கள் மூன்று திருடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு cctv காட்சியின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
இந்த வழக்கில் தொடர்டையதாக கருதப்பட்ட பிரபல சொகுசு கார் திருடன் சாடிந்திரா சிங் சகவத் மீது போலீஸின் கவனம் திரும்பியது. இந்நிலையில் புதுசேரியில் உள்ள சர்வீஸ் ஒன்றில் காரை திருடமுற்பட்ட சாடிந்திரா சிங்யை கடந்த ஜூன் 12 ஆம் தேதி போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் திருட்டு போன வழக்கில் பிரபல கார் திருடன் சாடிந்திரா சிங் சகவத் பங்கு இருப்பது தெரியவந்தது. 20 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சொகுசு கார்களை மட்டும் குறிவைத்து திருடிவந்த நபர் சாடிந்திரா சிங் தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவர் குடுத்த தகவலின் அடிப்படையில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருடப்பட்ட மூன்று சொகுசு கார்கள் குறித்த தேடுதல் வேட்டையை விரிவு படுத்தினர். இந்த நிலையில் அவர் வடஇந்தியில் விற்ற மூன்று சொகுசு கார்களில் ஒரு கார் பாகிஸ்தான் பார்டர் பகுதியான ராஜஸ்தான் மாநில எல்லையில் மீட்கப்பட்டு இருக்கிறது.
அந்த காரின் பதிவு என் மற்றும் தோற்றம் முற்றிலும் மாற்றப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த போது அதனை போலீசார் பறிமுதல் செய்து மீட்டுவந்துள்ளனர். சென்னையில் திருட பட்ட சொகுசு கார் பாகிஸ்தான் வரை பயணித்து விற்பனைக்கு போன சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.