6வது நாளாக தொடர் சரிவில் உள்ள பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் இன்று மேலும் 0.95% சரிவு
மும்பை: 6வது நாளாக தொடர் சரிவில் உள்ள பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் இன்று மேலும் 0.95% சரிந்துள்ளது. பிற்பகல் 827 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் முடிவில் சற்று மீண்டு 733 புள்ளிகள் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 733 புள்ளிகள் சரிந்து 80,426 புள்ளிகளானது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 236 புள்ளிகள் சரிந்து 24,655 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்களில் 26 நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகிறது.
வாகனத் தயாரிப்பு, தகவல் தொடர்பு, மருந்து உற்பத்தி, வங்கித் துறை பங்குகள் விலை சரிந்து விற்பனை. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகமான 4,288 நிறுவன பங்குகளில் 3,100 பங்குகள் விலை குறைந்தன. 1,041 பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமான நிலையில் 147 நிறுவனப் பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன. இந்திய மருந்துகள் மீது 100% வரி விதிக்கப்படும் என்ற டிரம்ப் அறிவிப்பால் மருந்து உற்பத்தி நிறுவன பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.