பங்குச் சந்தை குறியீட்டு எண் 0.4% வரை அதிகரித்து நிறைவு
Advertisement
மும்பை: தொடக்கத்தில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண் 0.4% வரை அதிகரித்து நிறைவு பெற்றது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 82,501 புள்ளிகளானது. எஸ்.பி.ஐ. 2%, மாருதி சுசூகி1.7%, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமென்ட் உள்ளிட்ட பங்கு விலை அதிகரித்தது. பிஇஎல், அதானி போர்ட்ஸ், எட்டர்னல், சன் பார்மா, ஐடிசி உள்ளிட்ட பங்குகளும் விலை அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104 புள்ளிகள் அதிகரித்து 25,285 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமான 4,350 நிறுவன பங்குகளில் 2,474 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. 1,706 நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்தகமான நிலையில் 170 நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன.
Advertisement