தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

+2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை!

2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ ஆவதைக் குறைக்க பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நடவடிக்கை யின் பலன் 2026 மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் நிச்சயம் பிரதிபலிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2 பொதுத்தேர்வு உயர்கல்விக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் தேர்வு எழுத வராமல் ‘ஆப்சென்ட்’ ஆகும் மாணவர்களின் எண்ணிக்கை பள்ளிக்கல்வித்துறைக்குத் தொடர் தலைவலியை அளித்து வருகிறது. புள்ளிவிவரத்தின்படி கடந்த 2022-23 கல்வியாண்டுக்கு 2024 மார்ச் மாதம் நடந்த தேர்வில் 8.51 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், மொழிப் பாடத்தை 50,674 பேர் எழுதவில்லை. இந்த அதிக ஆப்சென்ட்டுக்கு, கொரோனா காலத்தில் யாரையும் நீக்காமல், ஒரு நாள் பள்ளிக்கு வந்திருந்தாலும் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டதே காரணம் என்று கல்வித்துறை தெரிவித்தது. 2023-24 கல்வியாண்டில் 7.80 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், மொழிப் பாடத்தில் 12,364 பேரும், ஆங்கிலப் பாடத்தில் 12,696 பேரும் ஆப்சென்ட் ஆகினர். 2024-25 கல்வியாண்டில் 8.02 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், மொழிப்பாடத்தை 11,430 பேர் எழுதவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் குறையாமல் மாணவர்கள் பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆவது தொடர்கதையாகி வருகிறது. இதையடுத்து 2025-26 கல்வியாண்டுக்கான 2026 மார்ச் தேர்வில் 8.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆவதை தடுக்க முறையாகப் பள்ளிக்கு வந்த மாணவர்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஹால் டிக்கெட் வெளியிடுவது. ஆசிரியர்கள், ஆலோசகர்களைக் கொண்டு பொதுத்தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கி, தைரியமாக எதிர்கொள்ள அறிவுரை வழங்குவது. தேர்ச்சி பெற முடியாதோ என நினைக்கும் மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்குவது என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News