நாடாளுமன்றத்தின் இறையாண்மையை போன்றே மாநில சட்டமன்றத்தின் இறையாண்மையும் முக்கியமானது: கபில் சிபல் வாதம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் இறையாண்மையை போன்றே மாநில சட்டமன்றத்தின் இறையாண்மையும் முக்கியமானது என கபில் சிபல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விளக்கம் கேட்டது தொடர்பான வழக்கில் மேற்கு வங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் வாதங்களை முன்வைத்து வருகிறார். மசோதாக்களுக்கு ஒப்புதல் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று 7வது நாளாக விசாரணை தொடங்கியது. 'மசோதாவுக்கு ஒப்புதல் தரும் விவகாரத்தில் ஆளுநர் ஒரு முரண்பாட்டை உருவாக்க முடியாது. அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் அர்த்தமற்றதாகிவிடும்' என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்து வருகிறார்.
Advertisement
Advertisement