மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
திண்டிவனம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கடந்த 4 நாட்களாக பாமக நிர்வாக குழு, மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் என பல்வேறு கட்டங்களாக கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் அன்புமணி தரப்பில் இன்று(6ம் தேதி) மகாபலிபுரத்தில் மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதனால் மகளிர் அணியை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு அழைப்புகள் வருவதால் ராமதாஸ் பக்கம் தான் நிற்போம் என கூட்டத்தில் மகளிர் அமைப்பினர் தெரிவித்தனர். மேலும் ராமதாஸ் ஆதரவாளர்கள் அன்புமணி கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என தொலைபேசியில் தெரிவிக்க மகளிர் அணி நிர்வாகிகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.