பள்ளிக்கல்வி வரலாற்றில் இது மிகவும் சிறப்புவாய்ந்த விழாவாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை: பள்ளிக் கல்விக்கு என்று தனியாக மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; பள்ளிக்கல்வி வரலாற்றில் இது மிகவும் சிறப்புவாய்ந்த விழாவாகும். மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கிறேன். அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். இருமொழிக் கொள்கையே எங்கள் உறுதியான கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.