தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நட்சத்திர ஓட்டலில் போதையில் இருந்தவரை மயக்கி உல்லாசம் தொழிலதிபரிடம் 10 சவரன் செயின் பறித்த இளம்பெண் கள்ளக்காதலனுடன் கைது: நகையை ரூ.6 லட்சத்திற்கு விற்று காதலனுக்கு விலை உயர்ந்த பைக் பரிசு

சென்னை: நட்சத்திர ஓட்டலில் போதையில் இருந்த தொழிலதிபரை மயக்கி உல்லாசமாக இருந்து, 10 சவரன் செயினை திருடிய வழக்கில் இளம்பெண்ணை போலீசார் அவரது கள்ளக்காதலனுடன் கைது செய்தனர். ஆவடி காமராஜர் நகர் மெயின் ரோடை சேர்ந்தவர் மணி (47). தொழிலதிபரான இவர், கடந்த 27ம் தேதி தேனாம்பேட்டையில் ஒரு நட்சத்திர ஓட்டல் மதுபாரில் மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்கனவே அறிமுகமான பெண் தீபிகா (22) பாருக்கு வந்துள்ளார். இதை பார்த்த மணி அவருடன் பேசியுள்ளார். பிறகு இருவரும் பாரில் மது அருந்தியுள்ளனர்.

அதே ஓட்டலில் 104 என்ற அறையை எடுத்து அன்று இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். உடல் சோர்வு காரணமாக தொழிலதிபர் மணி தூங்கியதும், தீபிகா அவர் கழுத்தில் கிடந்த 10 சவரன் செயினை பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டார். மறுநாள் அவர் எழுந்து பார்த்த போது கழுத்தில் கிடந்த 10 சவரன் செயின் மாயமாகி இருந்தது. ஒருநாள் கழித்து கடந்த 29ம் தேதி இரவு 9 மணிக்கு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி உதவி ஆய்வாளர் மேத்யூ ரோஸ் சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டல் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்த போது, நட்சத்திர ஓட்டலுக்கு அடிக்கடி வந்து செல்பவர் குன்றத்தூர் சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்த தீபிகா (எ) தீபலட்சுமி என தெரியவந்தது. அவரை போலீசார் ஒரு வார தீவிர தேடலுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் விசாரணையின்போது, தீபிகா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: குன்றத்தூர் பகுதியை சேர்ந்த குமரன் என்பவரின் மகள் தீபிகா. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளான்.

தீபிகாவுக்கு மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இது அவரது கணவருக்கு தெரிந்ததும் தீபிகாவை கண்டித்துள்ளார். ஆனால் தீபிகா தனது கள்ளக்காதலை கைவிடாததால், ஒரு கட்டத்தில் கணவர் தீபிகாவை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு குழந்தையை தீபிகா தனது சகோதரனிடம் விட்டுவிட்டு தற்போது கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் திருமணம் செய்யாமல் சுற்றி வந்துள்ளார்.

இதனால் இரவு நேரங்களில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீபிகா தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல், அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் இரவு நேர பார்களுக்கு வார இறுதி நாட்களில் செல்வது வழக்கம். அப்படி இருவரும் ஜோடியாக செல்லும் போது, வசதிப்படைத்த வயதான நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா என சதீஷ்குமார் நோட்டமிடுவார். பிறகு வயதான நபர் தனியாக பாருக்கு வந்துள்ளாரா என தெரிந்து கொண்டு, அவர் அருகில் தீபிகாவை அமர வைத்துவிட்டு சதீஷ்குமார் சற்று தொலைவில் இருந்துகொள்வார்.

அப்போது தீபிகா வயதான தொழிலதிபர்கள் யாராவது அதிகளவில் மது போதையில் இருக்கிறார்களா என கண்காணித்து, அருகே சென்று தொழிலதிபருக்கு மதுபானம் பரிமாறுவது போல் பாவனை செய்து, போதை தலைக்கேறியதும், தனது உடல் அழகை காட்டி வயதான தொழிலதிபரை தன்வசப்படுத்தி ஒரு இரவுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை பேரம் பேசி அதே ஓட்டலில் ரூம் புக் செய்து உல்லாசமாக இருப்பார். தனது காதலி உல்லாசமாக இருக்கும் வரை ஓட்டல் வெளியே சதீஷ்குமார் காத்திருப்பார்.

திட்டமிட்டப்படி வயதானவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அவர் உடல் அசதியில் தூங்கும் நேரத்தை பயன்படுத்தி, அவரிடம் பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு ஒன்றும் தெரியாததுபோல தீபிகா வெளியே வந்து, கள்ளக்காதலனுடன் தப்பி சென்றுவிட்டுவார். இதுபோல் கடந்த 6 மாதங்களாக தீபிகா தனது கள்ளக்காதலனுடன் இணைந்து 10க்கும் மேற்பட்ட வயதான தொழிலதிபர்களை மயக்கி நகை மற்றும் பணத்தை பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகை மற்றும் பணத்தை இழந்தவர்கள் தங்களது குடும்பத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதால் வெளியே தெரிந்தால் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்று யாரும் தீபிகா மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். அதை தீபிகா தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி தான் தொழிலதிபர் மணி முழு போதையில் இருக்கும் போது, அவர் அருகே அமர்ந்து பாலுணர்வை தூண்டி உல்லாசத்திற்கு அழைத்து 10 சவரன் செயினை கள்ளக்காதலனுடன் திருடி சென்றது தெரியவந்தது.

பிறகு தொழிதிபரிடம் திருடிய 10 சவரன் செயினை தனது கள்ளக்காதலனுடன் இணைந்து 28ம் தேதியே அடகு கடை ஒன்றில் தீபிகா, எனது அம்மாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். ஆபரேஷன் செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால், நகையை விற்பனை செய்ய வந்ததாக பொய் சொல்லி அடைகுக்கடை உரிமையாளரிடம் கூறி ரூ.6 லட்சத்திற்கு 10 சவரன் செயினை விற்பனை செய்துள்ளார்.

பிறகு ரூ.6 லட்சத்தில் ரூ.2.50 லட்சத்திற்கு தனது கள்ளக்காதலன் சதீஷ்குமாருக்கு பல நாட்களாக ஆசைப்பட்டு வந்த விலை உயர்ந்த ‘கேடிஎம் டியூக்’ பைக்கை தீபிகா வாங்கி பரிசு அளித்துள்ளார். மீதமுள்ள பணத்தை இருவரும் செலவு செய்து கொண்டு ஜாலியாக சுற்றி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் தீபிகாவின் வாக்குமூலத்தின் படி, மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலன் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். பிறகு இருவரிடம் இருந்தும் நகை விற்பனை செய்த பணத்தில் பைக் வாங்கியது போக மீதடுள்ள ரூ.3,14,700 பணம் மற்றும் விலை உயர்ந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு நகையை வாங்கிய அடகுக்கடை உரிமையாளரிடம் இருந்து 10 சவரன் செயினையும் போலீசார் மீட்கப்பட்டனர்.