தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2025-26ம் ஆண்டிற்குரிய செந்தர விலைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் எ.வ.வேலு..!!

Advertisement

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில் 2025-26ம் ஆண்டிற்கான செந்தர விலைப் பட்டியலை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், தமிழ்நாடு பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்ட 2025-26 ஆம் ஆண்டிற்கான செந்தர விலைப் பட்டியலினை வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், 2025-26ஆம் ஆண்டிற்கான செந்தர விலைப் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசால் கீழ்கண்ட அலுவலர்களைக் கொண்ட செந்தர விலைப்பட்டியல் குழு அமைக்க 14.3.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

• முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), பொ.ப.து.,

• முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), நீ.வ.து.,

• முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை

• முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர், வனத்துறை

• நிதித்துறையை சார்ந்த உறுப்பினர்

• பொறியியல் இயக்குநர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

• பொறியியல் இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம்

• தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) நெடுஞ்சாலைத்துறை

• தலைமைப் பொறியாளர், நீ.வ.து., வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்

• தலைமைப் பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம்

• தலைமைப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

மேற்கண்ட குழு உறுப்பினர்கள் பல்வேறு மட்டத்தில் கட்டுமான பொருட்கள், மற்றும் இதர இனங்களின் விலைகள் குறித்து பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விவாதித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 3 தொகுதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது.

தொகுதி 1 : பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நீர்வளத்துறை

தொகுதி 2 : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், இந்து சமய அற நிலையத்துறை மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை.

தொகுதி 3 : வனத்துறை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்

இந்த செந்தர விலைப் பட்டியலை அரசுத் துறைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., நீர்வளத்துறை அரசுச் செயலாளர், J.ஜெயகாந்தன், இ.ஆ.ப., நிதித்துறை இணைச் செயலாளர் பிரதீக் தயாள் இ.ஆ.ப., நிதித்துறை துணைச் செயலாளர் C.A. ரிஷப் இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) ச.மணிவண்ணன், நெடுஞ்சாலைத்துறை தலைமை இயக்குநர் R.செல்வதுரை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News