நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக வழக்கறிஞர் இனியனுக்கு ரூ.1 லட்சம் ஐகோர்ட் அபராதம் விதித்தது. வழக்கை வாபஸ் பெறவும் தலைமை நீதிபதி அமர்வு அனுமதி மறுத்தது. உச்சநீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் அபராதத்தை சி.வி.சண்முகம் செலுத்தியதாக அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளது.