உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள்: அயப்பாக்கம் ஒரே நேரத்தில் திரண்ட 1000-க்கும் மேற்பட்ட பெண்கள்
அந்த வகையில் தற்போது மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் இந்த முகாம் ஆனது நடைபெற்று வருகிறது. இங்கே தமிழக அரசுக்கு கீழ் செயல்படும் அனைத்து துறைகளிலும் இருந்து அதிகாரிகள் வந்து இருக்கின்றனர். அவர்களுக்கு முகாமில் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக பட்டா மற்றும் உரிமைத்தொகை, மின் இணைப்பு, வங்கியில் இருந்து கடன் பெறுவது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு உடனடி தீர்வு காண்பதற்காக இங்க முகாம்கள் செயல்பட்டு வருகின்றது.
இந்த முகாமில் தற்போது மகளிர் உரிமை தொகை மனுக்களை வழங்குவதற்காக 1000க்கு மேற்பட்ட பெண்கள் திரண்டு இருந்தனர். இதனால் இங்க பரபரப்பான சூழல் ஏற்பட்டது. முகாமில் நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்களுக்கு உதவி செய்வதற்காக மகளிர் சுய உதவி குழு மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். குறிப்பாக மகளிர் உதவி சுயகுழுவில் இருந்து 150க்கு மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பெண்களிடம் இருந்து மனுக்களை பெறுவது, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்குவதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று காவல்துறையும் இந்த முகாம் சிறப்பாக நடைபெறுவதற்காக பாதுகாப்புதுறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து முகாமில் ஏராளமான பெண்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில் மனுக்களை கொடுக்க பொதுமக்கள் ஆர்வம்காட்டி வருகிறார்கள்.