வேப்பம்பட்டில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்
திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் ஒன்றியம், வேப்பம்பட்டு தனியார் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ப.பிரியா ராஜ் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி முகாமை தொடங்கிவைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அம்பிகா சண்முகம், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ச.சீனிவாசன், உதவி திட்ட மேலாளர் டாக்டர் ராஜேஷ்குமார், வட்டாட்சியர் எஸ்.பாலாஜி மற்றும் மாவட்ட சுகாதார 2ம் நிலை அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், முதலமைச்சரின் காப்பீடு திட்ட அலுவலர்கள் உள்பட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார மோகன் நன்றி கூறினார்.
முகாமில் 2272 மருத்துவ பயனாளர்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுனர். 210 மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 10 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இருதய சுருள் படம், எக்கோ ஸ்கேன், கர்ப்பப்பை வாய் புற்று நோய், நரம்பியல், எலும்பியல், நீரிழிவு நோய், நுரையீரல் நோய், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் போன்ற 17 சிறப்பு மருத்துவ துறை மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். 20,273 மருத்துவ பயனாளர்கள் பயன்பெற்றுள்ளனர். இதுவரை 1553 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.