உடுமலை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடல் தகனம்
திருப்பூர்: உடுமலை அருகே 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம் கொடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி ஆற்றிய சண்முகவேல் என்பவர் இன்று அதிகாலை வெட்டி கொல்லப்பட்டார். அவரது உடல் ஆனது திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் ஏடிஜிபி ஆசிர்வாதம் மற்றும் மேற்கு மண்டல ig செந்தில் மற்றும் திருப்பூர் sp யாதவ் உள்ளிட பலர் வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் மற்றும் இவர் இறந்ததிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தார் கேட்டுக்கொண்டார்கள். அதன் பிறகு அவரது உடல் இறுதி சடங்குக்காக உடுமலை மின் மயானம் எடுத்து வரப்பட்டது. அங்கு 10 போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்டு 30 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. .