தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூன்று வருடங்களாக வற்றாத குளங்கள்

Advertisement

*பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த மூன்று வருடங்களாக பருவ நிலைகள் மாறினாலும் தொடர்ச்சியாக குளங்கள் மற்றும் கண்மாய்கள் வற்றாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருவநிலை மாற்றங்கள் காரணமாக கொளுத்தும் வெயில், கடுமையான மழை, கடும் குளிர் என காலநிலை மாறி மாறி வருகிறது.

கோடை காலத்தில் மழையும் மழைக்காலத்தில் வெயிலும் கொளுத்துகிறது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் முன்னதாகவே மழை பெய்தாலும் இரண்டு, மூன்று மாதங்கள் மழை தள்ளி பெய்தாலும் கண்மாய்கள் மற்றும் குளங்களில் கடந்த மூன்று வருட காலமாக தண்ணீர் வற்றாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை சேர்ந்த குட்டி என்பவர் கூறும்போது, பல ஆண்டுகளாக கோடை காலங்களில் குளங்கள் முழுமையாக வறண்டு போய் இருந்த காலம் உண்டு. ஆனால் தொடர்ச்சியாக மூன்றாண்டுகளாக கொளுத்தும் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாமல் உள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் பழைய மற்றும் புதிய குளங்கள், விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான வில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் சன்னதி கோயில் குளம், திருவில்லிபுத்தூர் திரு முக்குளம் ஆகியவை வற்றாமல் காட்சியளிக்கிறது. இதிலும் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலின் புதிய குளம் மற்றும் பழைய குளம் முழுமையான கொள்ளளவுடன் உள்ளது.

இதனால் பெரியகுளம் கண்மாயை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் தொடர்ச்சியாக தண்ணீர் வற்றாமல் தேங்கி இருப்பதால் நிலத்தடி நீரும் உயரம் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

 

Advertisement

Related News