இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த கடல் அட்டை, இஞ்சி, மஞ்சள் பறிமுதல்
Advertisement
அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக 180 கிலோ கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து தகரசெட் முழுவதும் சோதனை செய்தனர். இதில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் 400 கிலோ மஞ்சள், 650 கிலோ இஞ்சி ஆகியவற்றை சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இவைகள் அனைத்தையும் பறிமுதல் செய்த காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இவைகளின் மதிப்பு நமது நாட்டில் ரூ.4 லட்சம் எனவும், இலங்கையில் ரூ.8 லட்சம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தகர செட் உரிமையாளரான, மண்டபம் மேற்கு தெருவைச் சேர்ந்த கடாபி என்பவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த இஞ்சி, மஞ்சளை மண்டபம் சுங்கத்துறையிடமும், கடல் அட்டையை வனத்துறையிடமும் போலீசார் ஒப்படைத்தனர்.
Advertisement