இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டதற்கு ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டதற்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானதாகும். தமிழ்நாட்டின் கடலோர மக்களின் உயிர், வாழ்வாதாரத்தை பாதுகாப்பது ஒன்றிய அரசின் கடமை. மீனவர்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் இலங்கை படையின் கொடுமையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
Advertisement
Advertisement