தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் துவக்கம்

*அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
Advertisement

ஸ்ரீவைகுண்டம் : தேசிய மீன் வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தமிழ்நாட்டில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் மொத்தம் 40 லட்சம் மீன் குஞ்சுகள் ரூ.1.20 கோடி செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மணிமுத்தாறு அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தில் வளர்க்கப்பட்ட 8-10 சென்டிமீட்டர் அளவுள்ள ஒரு லட்சம் மீன் விரலிகள் நேற்று ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன் குஞ்சுகளை தாமிரபரணி ஆற்றில் விட்டார். தொடர்ந்து மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக கடல்சார் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை, மீனவர்களுக்கு திருமண உதவித்தொகை, நுண்கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மீன்வளத்துறை சார்பில் செய்து வருகிறோம்.

குளங்களில் மட்டுமின்றி ஆறுகளிலும் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தாமிரபரணி, பவானி, காவேரி ஆற்றுப்படுகைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வருகிறது. தேசிய மீன் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குளங்களில் மீன் பிடிக்கும் உள்நாட்டு மீனவர்கள் பயனடைவார்கள். மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கையை கனிமொழி எம்பி செய்து வருகிறார் என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம், கன்னியாகுமரி, நெல்லை மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் தீபா, மோகன்ராஜ், மாநில வர்த்தக அணி அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், குமார்பாண்டியன், மாவட்ட திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம்,ஒன்றிய செயலாளர்கள் கொம்பையா, நகர செயலாளர்கள் சுப்புராஜ் கோபிநாத், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி, மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் பொன்இசக்கி, நகர இளைஞரணி அமைப்பாளர் இசக்கிகுமார், பேராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம்,

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் பேரூராட்சி தலைவர் கந்தசிவசுப்பு, அரசு வழக்கறிஞர் ஷாஜகான், காங்கிரஸ் வட்டார தலைவர் நல்லகண்ணு, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவகளை பிச்சையா, நிலமுடையான், மாவட்ட மகளிர் தலைவி மாரியம்மாள், நகர தலைவர் கருப்பசாமி, சேவாதார நகர தலைவர் சித்திரை, கிராம கமிட்டி தலைவர் வெள்ளூர் மகேஷ், பாலன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன் ராகவன், வள்ளிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Related News