இலங்கையின் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு: 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
கண்டி: இலங்கையின் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் கிராமத்தின் ஒரு பகுதியே புதையுண்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. டித்வா புயல் காரணமாகவரலாறு காணாத வெள்ளத்தால் இலங்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி 190க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் காணாமல் போன 2028 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து வருகிறது. மழை நின்ற போதிலும் கொழும்பு கம்பலா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறியதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் கிராமத்தின் ஒரு பகுதியே மண்ணுக்குள் புதைந்தது. இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் காவல் துறை மீட்பு படையினருடன் இணைந்து ராணுவத்தினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையியல் இலங்கையின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது . இதனால் கொழும்பு, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.