மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: மீண்டும் ஆடிய மழை தடைபட்ட இலங்கை - தெ.ஆ. போட்டி
கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று, இலங்கை- தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான போட்டி மழையால் தடைபட்டது. மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் தொடரின் 18வது போட்டி, இலங்கையின் கொழும்பு நகரில் நேற்று நடந்தது. அதில் இலங்கை- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீராங்கனைகள் விஷ்மி குணரத்னே 12 ரன் எடுத்த நிலையில் காயத்தால் வெளியேறினார். பின், கேப்டன் சமாரி அத்தப்பட்டு 11, ஹாசினி பெரேரா 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். 12 ஓவரில் இலங்கை அணி, 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்தது. அதனால் போட்டி நீண்ட நேரம் தடைபட்டது. அப்போது, இலங்கை வீராங்கனைகள் ஹர்ஷிதா சமரவிக்ரமா 6, கவிஷா தில்ஹரி 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Advertisement
Advertisement