ஸ்போர்ட்ஸ் பிட்ஸ்
* ரூ.25 லட்சம் இழப்பீடு ஆர்சிபி அறிவிப்பு
பெங்களூரு: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, கடந்த ஜூன் 4ம் தேதி நடந்த கொண்டாட்டங்களின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆர்சிபி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட செய்தியில், ‘கடந்த ஜூன் 4ம் தேதி, ஆர்சிபி குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவத்தால் எங்கள் இதயம் நொறுங்கியது. அவர்களின் வெற்றிடம் எங்களின் நினைவுகளில் என்றென்றும் நீடிக்கும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளது.
* ஆர்ஆர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விலகல்
பெங்களூரு: ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகிக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நீண்ட நெடிய பயணத்தில், முக்கிய அங்கமாக ராகுல் திகழ்ந்தார். ஒரு தலைமுறை வீரர்களுக்கு அவர் சிறப்பாக வழிகாட்டியாக இருந்தார். 2026 ஐபிஎல் துவங்கும் முன்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பணியில் இருந்து விலகியுள்ளார்’ எனக் கூறியுள்ளது.