தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஸ்போர்ட்ஸ் பிட்ஸ்

* உலக மல்யுத்தம் அமான் பங்கேற்பு

லக்னோ: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கத்துடன் திரும்பிய ஒரே வீரரான அமான் ஷெராவத் (22), குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற உள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். லக்னோவில் நடந்த, 57 கிலோ தகுதிச் சுற்றுப் போட்டியில் சுமித், ராகுலை வீழ்த்தியதை அடுத்து, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க அவர் தேர்வாகி உள்ளார்.

* கால்பந்து வீரர் தாமசுக்கு பாலியல் வழக்கில் ஜாமீன்

லண்டன்: கானாவை சேர்ந்தவரும், ஆர்சனல் கால்பந்து கிளப் அணிக்காக முன்னர் ஆடி வந்தவருமான தாமஸ் பார்டே (32), கடந்த 2021-22ல் தங்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக 3 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் நடந்து வரும் வழக்கு தொடர்பாக, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதின்றத்தில் நேற்று, தாமஸ் பார்டே ஆஜரானார். அவரது தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

* டிம் டேவிட்டுக்கு அபராதம்

லண்டன்: வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகளில் ஆடிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, ஐந்தையும் வென்று வாஷ்அவுட் செய்தது. அந்த தொடரின் கடைசி போட்டி, கடந்த ஜூலை 28ம் தேதி நடந்தபோது, நடுவர் முடிவை எதிர்த்து வாக்குவாதம் செய்தது உள்ளிட்டவற்றுக்காக ஆஸி வீரர் டிம் டேவிட்டுக்கு ஐசிசி, போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. மேலும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.