இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருப்பூர், புதுக்கோட்டை, தென்காசி, திருப்பத்தூரில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் ரூ.15 கோடியில் விளையாட்டு வளாகம். கோவில்பட்டியில் ரூ.7 கோடியில் ஹாக்கி முதன்மை நிலை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.