வேகத்தடையில் ஏறியபோது கவிழ்ந்தது கன்டெய்னர் லாரியில் பைக் சிக்கி வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்
திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டத்தை சேர்ந்தவர் விஷ்வா (28). தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்றிரவு நண்பர்கள் ஏகவள்ளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கமலேஷ் (26), அம்சா தோட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (27) ஆகியோருடன் பைக்கில் எண்ணூர் விரைவு சாலையில் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் இருந்து திருவொற்றியூர் காலடிப்பேட்டை நோக்கி சென்றுள்ளார். அங்குள்ள வேகத்தடையில் ஏறியபோது பைக்குடன் தடுமாறி விழுந்ததில் பின்னாடி வந்துகொண்டிருந்த கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கினர்.
இதில் விஷ்வா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார். கமலேஷ், சந்தோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்தனர். அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சென்று விசுவாசின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.