தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறப்பு சுருக்க முறை பட்டியல்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்; வித்தியாசம் என்ன?

* சிறப்பு செய்தி

Advertisement

இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகளை மேற்கொள்ளும். இந்த பணிகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும். முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் உள்ள பெயர் விவரங்களை சரிபார்த்து திருத்திக் கொள்ளவும், பெயர் நீக்கப்பட்டவர்கள் பெயரை சேர்க்கவும், புதிதாக சேருபவர்களும் விண்ணப்பிக்கவும் இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காக சிறப்பு முகாம்களையும் இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும். அதுவும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இந்த நாட்களில் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை டிசம்பர் மாதத்தில் சரிபார்த்து, அவற்றை இறுதி செய்து ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த பணியின்போது வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக வந்து விண்ணப்ப படிவங்களை வழங்குவார்கள். முன்னதாக வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். பெயர் இடம்பெறாமல் இருந்தால், இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிடும் 11 ஆவணங்களை விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தாவிட்டால் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க முடியாமல் போய்விடும்.

அதாவது ஆதார், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நாடாளுமன்ற சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆய்வு செய்து வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்நிலையில், பேரவை தேர்தலை சந்திக்க உள்ள பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR ) நடைமுறையை அமல்படுத்தியது. சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதற்கு பீகார் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி எனக் குறிப்பிட்டு தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரத்துடன் கூறினார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இந்த பெரும் சர்ச்சைக்கு மத்தியில் 2ம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், சட்டீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைமுறையை அமல்படுத்த போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்து இருந்தார். அதில் உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பாஜவும் அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றிபெற்றுவிடலாம் என கணக்கு போடுகிறார்கள்.

அதாவது, நேரடியாக தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையை பறித்துவிட்டு வெற்றி பெறலாம் எனப் போடுகின்ற கணக்கு என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்புக்கணக்காகத்தான் ஆகும். S.I.R. முறையை கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலை சீர்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்கவேண்டும். அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை திமுகவிற்கு உண்டு என்றும் கூறியிருந்தார். இதேபோல இந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR ) நடைமுறையை அமல்படுத்தியது. சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.

S.S.R சிறப்பு சுருக்கமுறை திருத்தம் S.I.R சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்

1. ஆண்டுதோறும் நடைபெறும் 1. பத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை

2. திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியல் நிறுத்தி வைக்கப்படாது 2. வாக்காளர் பட்டியல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்

3. வாக்காளரின் உண்மைத்தன்மையை பலமுறை உறுதிப்படுத்தும் நடைமுறை இல்லை 3. S.I.R-ல், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளரின் வீட்டுக்கு 3 முறை சென்று உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவர்

4. முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்யப்படும் 4. புதிதாக பெயர் இணைப்பதோ, திருத்தங்கள் செய்ய இயலாது

5. சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெறும் 5.சிறப்பு முகாம்கள் எதுவும்

நடைபெறாது

6. வாக்காளர் பட்டியல் திருத்தங்களை தேர்தல் ஆணையமும், வாக்குச்சாவடி முகவர்களும் இணைந்து மேற்கொள்வர் 6. திருத்தப் பணிகளை முழுக்க முழுக்க தேர்தல் ஆணையம் மட்டுமே செய்யும்.

(இதன் மூலம் தேர்தல் ஆணையம் ஒரு சாராக செயல்படக்கூடும். அதாவது, பிடிக்காதவர்களை அல்லது தங்களுக்கு யார் ஓட்டு அளிக்க மாட்டார்கள் என்பதை காரணம் காட்டி நீக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால்தான் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது).

Advertisement