எடப்பாடிக்காக அவரது மனைவி சீர்காழி கோயிலில் சிறப்பு பூஜை
Advertisement
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாத சுவாமி கோயிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சுக்கிர வார வழிபாடு நடப்பது வழக்கம். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால், பில்லி சூனியம் விலகும். எதிர்ப்புகள் விலகும். சட்ட சிக்கல்கள் தீரும் என்பது ஐதிகம். இங்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடந்த சட்டைநாதர் சுவாமி சுக்கிரவாத பூஜையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். கணவருக்கு சிக்கல்கள் விலகி, எதிரிகள் தொல்லைகள் நீங்கி, மீண்டும் அவர் முதல்வராக வேண்டி இந்த சுக்கிரவார பூஜையில் அவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
Advertisement