ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம்: சண்முகம் வலியுறுத்தல்
மதுரை: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் மதுரையில் நேறறு நிருபர்களிடம் கூறியதாவது: கவின் கொலை வழக்கு மட்டுமின்றி சாதி ஆணவ கொலைகளை தடுக்கவும், அவற்றில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தனி சட்டம் இயற்றக்கோரி சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தோம். தொடர்ந்து நடக்கும் ஆணவ கொலைகள் தனி சட்டம் இயற்ற வேண்டுமென்பதை தான் வலியுறுத்துகிறது. இது தொடர்பாக, முதல்வரை நேரில் சந்தித்தும் வலியுறுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினார்.