தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாரத தேசத்தின் வலிமை எது?

பெரும்பாலும் நமது சுதந்திரம் என்பது ஒரு அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு இன்னொரு அடிமைத்தளத்திற்குள் புகுவதிலேயே இருக்கிறது. எது உண்மையான சுதந்திரம்? என்றால், நினைத்ததை செய்வது, ஜாலியாக இருப்பது, இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை வைத்திருக்கிறோம். ஆனால், உண்மையில் எதுதான் சுதந்திரம்? நாட்டின் குடிமக்களுக்கு பேச்சு, எழுத்து, வாழ்தல், பொருளீட்டுதல், மதம், மொழி ஆகிய எல்லாவற்றிலுமே பிறர் தலையீடு இன்றி அனைவராலும் அனுபவிக்கப்படும் விடுதலையே சுதந்திரம் என்கிறோம். மனிதர்கள் சிறப்பாக செயல்படும் வாய்ப்பிற்குரிய சூழ்நிலையை நிர்வகிப்பதே சுதந்திரம் ஆகும் என்கிறார் ஆங்கிலேய பொருளாதார நிபுணர் ஹெரால்ட் லாஸ்கி. இயற்கை சுதந்திரம், குடிமை சுதந்திரம், அரசியல் சுதந்திரம், தனிப்பட்ட சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், நிதி சுதந்திரம், குடும்பம் சார்ந்த சுதந்தரம், தேசிய சுதந்திரம், பன்னாட்டு சுதந்திரம் என எத்தனையோ சுதந்திரங்கள் பற்றி நாம் பேசி வருகிறோம்.

இங்கு சுதந்திரம் வேண்டுமா? அடிமைத்தனம் வேண்டுமா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்பது முன்னரே வரையறுக்கப்பட்டது. ஏனெனில், அடிமையாய் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. உலகெங்கும் இன்றும் நடந்துகொண்டிருக்கும் உரிமை போராட்டங்கள் இதைத்தான் நமக்கு சொல்லித்தருகின்றன. தங்கள் சுதந்திர சிறகுகள் நறுக்கப்பட எவரும் முன்வந்து கொடுப்பதில்லை. நமக்கு பிடித்தது அல்லது பிடிக்காதது என்ற வரையறைக்குள் உள்ளவைகளை நம் சுதந்திரம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். நாம் விரும்பியதை செய்வதுதான் நம் சுதந்திரம் என்றால், அந்த விருப்பத்திற்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்றுதானே பொருள். எனவே, நமது விருப்புகளும் வெறுப்புகளும் நம் வேலிகளா அல்லது சுதந்திரமா? என ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. நமக்கு பிடித்ததை மட்டுமே நாம் செய்வதென்பது நம் சுதந்திரமா? அல்லது கட்டுப்பாடா? சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுத்து செயல்படுவதுதானே சுதந்திரத்தின் உண்மை நிலையை உணர்த்தும்.

சுதந்திரத்தின் பலனையும், இன்பத்தையும் அனுபவிக்கிற நாம் அதை பெற நமது முன்னோர்களுக்கு ஏற்பட்ட வலிகளையும், துன்பத்தையும் இப்போதாவது நினைவுகூற வேண்டும். அதுவே, சுதந்திரத்திற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட அம்மாமனிதர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய மரியாதையாகும். ஏனெனில், இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற, கொடுத்த விலை அளவிடற்கரியது. இலட்சோப லட்சம் பேர் தங்களது இன்னுயிரை நீத்து இருக்கிறார்கள். 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள, இன்றும் நினைவு சின்னமாக விளங்கும் அந்தமான் சிறைகளில் அடைப்பட்டு தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் முடித்துக்கொண்டவர்கள் ஆயிரமாயிரம் பேர். இந்தியாவிற்கு சுதந்திரம் ஏதோ கேட்டவுடன் கிடைத்து விட்டது போல பலரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், சுதந்திரத்திற்காக நடைபெற்ற சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவை அகிம்சை போராட்டங்கள்தான் எனினும், இந்த சத்தியாகிரக போராட்டத்திற்கு பின்னால் உயிர்த்தியாகம் செய்தோரின் எண்ணிக்கை ஒன்றிரண்டு அல்ல, பல கோடிகளை தாண்டும். ஆம், 1608-ல் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் நுழைந்த நாள் முதல் அவர்கள் வெளியேறிய 1947-ஆகஸ்ட்-14 ஆம் நாள் நள்ளிரவு வரையிலும் இந்திய மக்கள் மீதான ஆங்கிலேயர்களின் நேரடி மற்றும் மறைமுக மனிதநேயமற்ற போர் முறைகளால் எத்தனை கோடி மக்களை இழந்திருக்கிறோம் என எண்ணிப் பார்த்திருக்கிறோமா?.

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று இந்தியா மட்டுமல்லாது மேலும் 5 நாடுகள் தங்களது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுகின்றன. 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம்தேதி ஜப்பானின் ஆளுகையில் இருந்து விடுதலை பெற்ற தென்கொரியா, வடகொரியா, 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம்தேதி ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற பஹ்ரைன், பிரான்ஸிடம் இருந்து 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்ற காங்கோ, ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்து 1866-ம் ஆண்டு ஆகஸ்ட்-15-ஆம் தேதி விடுதலை பெற்ற லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளும் இந்தியாவோடு, அதே நாளில் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு இனங்கள் என வேறுபாடுகள் பல இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை ஒரு மனதாக அனைவரும் ஏற்று இந்தியாவில் சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. அதுவே, நம் பாரத தேசத்தின் வலிமை.