தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பள்ளி வளாகங்களிலிருந்து இயக்கப்படும் 50 சிறப்பு பயண நடை பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (18.8.2025) திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போக்குவரத்துத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 25 பள்ளி வளாகங்களிலிருந்து மாணவ, மாணவிகளுக்காக இயக்கப்படும் 50 சிறப்பு பயண நடை பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்து, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

தமிழ்நாடு முழுவதும் 35,12,147 மாணவ, மாணவிகள் பயணம் மேற்கொள்ள 2025-2026 கல்வியாண்டுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட உள்ளது. இதில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சுமார் 4,10,000 மாணவ, மாணவிகளுக்கு பயண அட்டைகள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த ஆண்டுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்குவதை தொடங்கி வைக்கும் வகையில், மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்கினார்.

சென்னை மாநகரில் பயிலும் மாணவ, மாணவிகள் அவர்களது தினசரி பேருந்து பயணத்தின்போது மிகுதியான கூட்டம் மற்றும் பொதுமக்களுடன் நெரிசலில் நின்று கொண்டு பயணிப்பது போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதை தவிர்க்கவும், மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பேருந்து சேவையை வழங்கவும் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பள்ளிகளுக்கு, 50 பயண நடைகளாக "சிறப்பு மாணவர் பேருந்துகளை" காலை பேருந்து முனையத்திலிருந்து இயக்கி, வழித்தடங்களில் பள்ளி மாணவர்களை மட்டும் ஏற்றி, பள்ளி வளாகத்தின் உள்ளே சென்று இறக்கிவிடப்படுவர். மேலும் மாலை நேரங்களில் பள்ளி வளாகத்தின் உள்ளிருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு, உரிய வழித்தடத்தில் இயக்கப்படும்.

இதனால் மாணவர்கள் பாதுகாப்பாகவும், நெரிசலின்றியும் பயணிக்க இயலும். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு என இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.த.பிரபு சங்கர், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவர் எஸ். மதன்மோகன், மாநகராட்சி ஆளுங்கட்சி துணைத் தலைவர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ், இணை மேலாண் இயக்குனர் சி.கு.ராகவன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.