எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை
01:52 PM Aug 18, 2025 IST
டெல்லி: அரசு சொத்துகளை சேதப்படுத்தினால் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். அரசு சொத்தை சேதப்படுத்த எம்.பி.க்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவில்லை. பொருட்களை சேதப்படுத்திய எம்.எல்.ஏ.க்கள் மீது பல மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அரசு சொத்துகளை அழிக்காதீர்கள் என எச்சரிக்கிறேன்; இது என் வேண்டுகோள் எனவும் பேசினார்.