தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவ்வையார் குறித்து பேரவையில் காரசார விவாதம்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன்(அதிமுக) பேசுகையில் “ வேதாரண்யம் தொகுதி துளியாப்பட்டினத்தில் அவ்வையார் அறிவுக் களஞ்சியம் அமைக்க அரசு முன்வருமா” என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் சாமிநாதன் பேசுகையில்” நிதிநிலைக்கு ஏற்ப முதல்வரின் கவனத்திற்கு கொண்டு அரசு பரிசீலனை செய்யும்” என்றார்.
Advertisement

துரைமுருகன்: அவ்வையார் என்பது ஒருவரல்ல, அவ்வையார் என்பது ஐந்து பேர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறம் செய்ய விரும்பு என பாடும் அவ்வையார் வேறு, புறநானூறு பாடும் அவ்வையார் வேறு. எனவே ஐந்து அவ்வையாரில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார்?.

ஒ.எஸ்.மணியன்: எங்கள் ஊரில் கோயில் வைக்கப்பட்டிருக்கிற, மணிமண்டபம் அமைக்கப்படும் அவ்வையாருக்கு தான் அறிவுக்களஞ்சியத்தை வையுங்கள்.

சபாநாயகர் அப்பாவு: ஐந்து அவ்வையார் இருக்கும் போது வேதாரண்யத்தில் இருக்கும் அவ்வையார் யார் என்பது தான் தற்போதைய கேள்வி.

ஓ.எஸ்.மணியன்: ஒரு காலத்தில் பாடல் பாடிய எழுதியவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் அனைவரையுமே அவ்வையார் என்று அழைத்ததாக தான் சொல்லப்படுகிறது.

துரைமுருகன்: நம்ம வீட்டில் வயசானவர்களை ஆயா என்று அழைப்பது போலவா?.

தங்கம் தென்னரசு: தமிழறிஞர்களுக்கு அமைக்கப்படும் நினைவு மண்டபங்கள், படிப்பகங்களாக அமைய வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம். எனவே அவ்வையார் அறிவுக்களஞ்சியம் அமைகக் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement