ஸ்பெயினில் நடந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் மூன்றாவது இடம்
சென்னை: தமிழில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்துக்கு பிறகு புதிய படத்தில் நடிக்காத அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற தனது அணியின் மூலம் துபாய், பெல்ஜியம் உள்பட பல நாடுகளில் நடக்கும் முக்கிய கார் பந்தயங்களில் பங்கேற்றார். இதில் அவரது அணி துபாயில் 2வது இடமும், இத்தாலியில் 3வது இடமும், பெல்ஜியத்தில் 3வது இடமும் பிடித்தது.
Advertisement
தற்போது ஸ்பெயினில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்றார். நேற்று நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் 3வது இடம் பிடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து அடுத்தடுத்த பந்தயங்களில் சாதித்து வரும் அஜித் குமார் ரேஸிங் அணி, இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisement