யூரோ கோப்பை மகளிர் கால்பந்து: புயலாய் சுழன்ற ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேற்றம்
அதன் பலனாக ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பை ஸ்பெயினின் நடுகள வீராங்கனை மரியோனா கால்டென்டி வீணாக்கினார். ஸ்பெயினின் மற்ற முயற்சிகளும் சுவீஸ் கோல் கீப்பர் லிவியா பெங் அதிரடியால் வீணாகின. அதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. தொடர்ந்து 2வது பாதியிலும் ஸ்பெயினின் கோல் முயற்சி தொடர, சுவிஸ் அவ்வப்போது கோலடிக்க முயன்றது. ஸ்பெயின் முயற்சிக்கு பலனாக, ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் அயிட்டனா போன்மடி தட்டித்தந்த பந்தை பதிலி ஆட்டக்காரர் அதெனியா டெல் காஸ்டிலோ கோலாக மாற்றினார்.
அதனால் உற்சாகமான ஸ்பெயின் வீராங்கனை கிளாடியா பினா தானே கடத்தி வந்த பந்தை, லிவியாவை ஏமாற்றி கோலாக்கி முன்னிலையை அதிகரித்தார். அதன் பின், இரு அணிகளின் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. வெற்றி பறிபோகிறதே என்ற பதற்றத்தில் கடைசி நிமிடத்தில் முரட்டு ஆட்டம் ஆடிய சுவிஸ் வீராங்கனை நோயல் மாரிட்ஸ் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று 2வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. போட்டியை நடத்தும் சுவிஸ் காலிறுதியுடன் வெளியேறியது.