விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன்கள்
1. டெக்னீசியன்- பி
மிஷினிஸ்ட்-1 இடம், பிட்டர்-1, பிளம்பர்-1, எலக்ட்ரீசியன்-2, டர்னர்-2, ஏசி மெக்கானிக்-1, எலக்ட்ரானிக் மெக்கானிக்-2. சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100. வயது: 18 முதல் 35க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்- பி
சிவில்-2 இடம், மெக்கானிக்கல்-2, எலக்ட்ரிக்கல்-2, கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி-3, எலக்ட்ரானிக்ஸ்-1. சம்பளம்: ரூ.44,900- ரூ.1,42,400. வயது: 18 முதல் 35க்குள். தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: டெக்னீசியன்- ‘‘பி’’ பணிக்கு ரூ.500 மட்டும். டெக்னிக்கல் அசிஸ்டென்ட்- ‘‘பி’’ பணிக்கு ரூ.750 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு முழு விண்ணப்பக் கட்டணமும் இதர பிரிவினருக்கு ரூ.400ம் திருப்பித் தரப்படும்.
https://www.prl.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2025.