எஸ்.பி.வேலுமணி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான நிதி முறைகேடு புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு புகார் கூறியது. அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
Advertisement
Advertisement