தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி வழங்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது : ஐகோர்ட்
02:58 PM Apr 10, 2024 IST
Share
சென்னை : தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி வழங்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கடைசி நேரத்தில் கூடுதல் தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும்படி உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் நேரில் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தெற்கு ரயில்வேக்கு தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது.