தென் மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை நிறுத்தி வைத்தது ஐகோர்ட்..!!
அதில், தமிழக அரசு போக்குவரத்துக்கு கழக நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகை நீண்ட நாட்களாக செலுத்தாமல் போனதால் அந்த நிலுவை தொகை ரூ.276 கோடி செலுத்தாமல் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்கள். சுங்கன்சாவடி ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் .போக்குவரத்து கழகங்கள் இந்த நிலுவை தொகையை செலுத்தாமல் நீட்டித்து கொண்டே இருந்தால் அந்த தொகை ரூ.300 கோடி ரூ.400 கோடி உயரும் என தெரிவித்தார். அரசு அதிகாரிகள் இந்த பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்டு விரைவாக செயல்படவில்லை என வேதனை தெரிவித்த அவர் இதனால் மக்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் தென்மாவட்டங்களுக்கு செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கக்கூடிய கப்பலூர்,சாட்டை , புதூர், நாங்குநேரி சுங்கம்சாவடி வழியாக இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அனுமதிக்கக்கூடாது அவர் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தார்.
சுங்கன்சாவடி பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையோ அல்லது அசம்பாவிதங்களோ நடக்காமல் இருக்க காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்த நிலையில் உடனடியாக நேற்று அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜே. ரான்ஜன் நீதிபதிகள் நீதிமன்றத்தின் மூலம் ஆஜராகி இந்த வழக்கில் தீர்வு ஏற்பட இருப்பதாகவும். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அதனடிப்படையில் இன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் இன்று ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜே. ரபீந்திரன் பிரச்சனைக்கு தீர்வான நடத்தி வருவதாகவும். எனவே நல்ல தீர்வு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதை அடுத்து அவரது உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி தென்மாவட்டங்களுக்கு செல்லும் 4 சுங்கன்சாவடிகள், அரசு பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஜூலை 31ம் தேதி வரைக்கும் நிறுத்தி வைப்பதாகவும். அரசு தரப்பு தகவலை ஏற்று கொள்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். எனவே பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் வழக்கம் போல பேருந்துகளை நிறுத்தலாம் என்றும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.