தெ.ஆ.வுடன் 3வது டி20 மேக்ஸ்வெல் அதிரடி ஆஸி அபார வெற்றி
கெய்ன்ஸ்: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு டி20 போட்டியில் வென்ற நிலையில், கெய்ன்ஸ் நகரில் நேற்று 3வது டி20 நடந்தது. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரர்கள் சொதப்பலாக ஆடி அடுத்தடுத்து அவுட்டாகினர். அந்த அணியின் இளம் வீரர் டெவால்ட் புருவிஸ் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 53 ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா 7 விக்கெட் இழந்து 172 ரன் எடுத்தது. அதன் பின், 173 ரன் வெற்றி இலக்குடன் ஆஸி களமிறங்கியது. துவக்க வீரரான கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 54 ரன் குவித்தார். அதன் பின் வந்தோர் அடுத்தடுத்து அவுட்டானபோதும், கிளென் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி 36 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 62 ரன் குவித்தார். 19.5 ஓவரில் ஆஸி 8 விக்கெட் இழந்து 173 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-1 என்ற கணக்கில் ஆஸி தொடரை கைப்பற்றியது.