தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரன்டிஸ்கள்
பயிற்சி: டிரேட் அப்ரன்டிஸ் (பிரஷ்ஷர்/எக்ஸ் ஐடிஐ). மொத்த காலியிடங்கள்: 3518.
பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள் விவரம்: அட்வான்ஸ்டு வெல்டர், கார்பென்டர், கோபா, டீசல் மெக்கானிக், டிராப்ட்ஸ்மென் (சிவில்), எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேசன் டெக்னாலஜி சிஸ்டம் மெயின்டெனன்ஸ், மிஷினிஸ்ட், மெக்கானிக் மோட்டார் வெஹிக்கிள், மெக்கானிக் மிஷின் டூல் மெயின்டெனன்ஸ், மெக்கானிக் ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிசனிங், பெயின்டர், பாசா, பிளம்பர், ஸ்டெனோகிராபர் மற்றும் அசிஸ்டென்ட், டர்னர், வெல்டர், வயர்மேன், எம்எல்டி (ரேடியாலஜி), எம்எல்டி (பேத்தாலஜி), எம்எல்டி (கார்டியாலஜி).
தகுதி: 1. (எக்ஸ்-ஐடிஐ): 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. பிரஷர் (Fresher)- (ஐடிஐ அல்லாதவர்கள்): இந்த பிரிவுக்கு குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்எல்டி பிரிவுக்கு குறைந்தது 50% மதிப்பெண்களுடன் அறிவியல்/கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25.08.2025 தேதியின்படி எக்ஸ் ஐடிஐ பிரிவுக்கு 15 முதல் 24க்குள்ளும், ஐடிஐ அல்லாத பிரிவுக்கு (Non-ITI) 15 முதல் 22க்குள்ளும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
10ம் வகுப்பு/பிளஸ் 2/ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களில் பிரஷர் (Fresher) எனில் வெல்டர் டிரேடுக்கு 15 மாதங்களும், எம்எல்டி பிரிவுக்கு 15 மாதங்களும், பிட்டர்/பெயின்டர் பிரிவுக்கு 2 வருடங்களும் பயிற்சி வழங்கப்படும். எக்ஸ்-ஐடிஐ பிரிவுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும்.
பிரஷ்ஷருக்கு (Fresher) ரூ. 6 ஆயிரமும், எக்ஸ் ஐடிஐக்கு ரூ.7 ஆயிரம், எம்எல்டி பிரிவுக்கு ரூ.7 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.09.2025.