அக்.27ம் தேதி சூரசம்ஹாரம்: திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தூத்துக்குடி: திருச்செந்தூரில் அக்.27ம் தேதி நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்தை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக்.26ல் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக்.27ல் திருச்செந்தூரில் இருந்து சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், திருச்செந்தூரில் இருந்து ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
Advertisement
Advertisement