பாலக்காட்டில் சூரசம்ஹாரம்
பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கொடும்பு சுப்ரமணியர் சாமி கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது. முருகப்பெருமான், வீரபாகு சமேதராக சப்பரத்தில் எழுந்தருளி தேர்முட்டி வீதிகளில் சூரர்களை வதைக்கும் நிகழ்ச்சிகள் விமர்சையாக நடந்தன.தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. இதேபோன்று சித்தூர், நல்லேப்பிள்ளி, கொழிஞ்சாம்பாறை, தத்தமங்கலம், பொல்ப்புள்ளி, நெம்மாரா, கொல்லங்கோடு ஆகிய இடங்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
தொடர்ந்துt இன்று சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சித்தூர் கடைவீதி குமாரநாயக சுப்ரமணியர் சாமி கோவிலில் 148-வது ஆண்டு சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றன. வீரபாகு சமேத முருகப்பெருமான், நரகாசூரன், பானுகோபன், சிங்கமுகா சூரன், சூரபத்மன் ஆகிய சூரர்களுடன் வீதியுலா புறப்பட்டு சித்தூர் வட்டாரத்தில் திருவீதியுலா வந்தப்பின் இரவு சூரர்களை வதம் நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து உற்சவர் சோகநாஷினி நதியில் நீராடி விஷேச தீபாரதனை பூஜைகள் இரவு நடந்தது. தொடர்ந்து நாளை சுவாமி திருக்கல்யாணம், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இன்று இரவு வண்ணமயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் நாதஸ்வரமேளத்துடன் வீதியுலா வந்துவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.