30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்கள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது; இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்: நீதிபதி கேள்வி
மதுரை: Dude திரைபடத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்களை நீக்க கோரி இசையமைப்பாளர் இளையராஜா ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறி பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனது பாடலை உருமாற்றி உள்ளனர்; பாடலுக்கான உரிமம் தங்களிடம் உள்ளது. பாடல்களின் உரிமம் பெற்றிருந்த சோனி நிறுவனத்திடம் இருந்து பாடல்களை பெற்றோம் என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போது கேட்டு ரசிப்பது ட்ரெண்டாகி வருகிறது. இசையமைப்பாளர் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார் என உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement