லாரி மோதியதில் மகனுடன் சென்ற இன்ஸ்பெக்டர் பலி
கோவை: கோவை சிங்காநல்லூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் பானுமதி (52). தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர். இவர் நேற்று முன்தினம் விருதுநகர் கோர்ட்டுக்கு சாட்சியம் அளிக்க சென்றுவிட்டு, நேற்று அதிகாலை கோவை திரும்பினார். அவரை சிங்காநல்லூரில் இருந்து அவரது மகன் சரேஸ் நாராயணன்(22) பைக்கில் அழைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். காமராஜர் ரோடு அருகே பின்னால் வந்த லாரி முந்தி செல்ல முயற்சி செய்துள்ளது. அதில் பைக்கில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். அப்போது அந்த லாரி இன்ஸ்பெக்டர் பானுமதி மீது ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
Advertisement
Advertisement