தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மகன் கூட்டிய பொதுக்குழுவால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற தந்தையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஆக்டிங் மாவட்ட செயலாளராக சுற்றி வரும் மாஜி உளறல்காரரின் மகன் கட்சி நிர்வாகிகளை மரியாதையாக நடத்துவதில்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் இலைக்கட்சியில் யார் பெரியவர் என்ற கோதாவால் நிர்வாகிகளும், கட்சியினரும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்காம்.. மாவட்டத்தில் இலைகட்சி கிழக்கு மாவட்ட செயலாளராக மாஜி மந்திரி உளறல்காரர் உள்ளார்.

இவர் கட்சியின் வருவாய் கவனிப்பு பொறுப்பில் இருப்பதால் மாதத்தில் பெரும்பாலான நேரம் தலைநகருக்கு சென்று விடுகிறாராம்.. பூட்டு நகரத்திற்கு வருவதே ஓரிரு நாட்கள் மட்டும்தானாம்.. இதனால், கட்சி தொடர்பான நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளும், கட்சியினரும் சந்தித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.. இதனால், தனது தந்தைக்காக அவரது மகனும், மாநகராட்சி கவுன்சிலருமான மைக் நடிகரின் பெயரைக் கொண்டவர், ஆக்டிங் மாவட்ட செயலாளராக சுற்றி வருகிறாராம்..

இவர் கட்சி நிர்வாகிகளை மரியாதையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாக எழுந்துள்ளதாம்.. அவர் சொல்வதை மட்டும்தான் செய்ய வேண்டுமாம்.. அதேநேரம் உளறல்காரரின் தம்பி மகனான ராஜாவின் பெயரைக் கொண்டவரோ கட்சியினரை அரவணைத்து செல்வதாக கட்சியினர் சொல்றாங்க.. இதனால், கட்சியினரிடம் இவருக்கென தனி செல்வாக்கு இருக்காம்.. பங்காளிகளுக்குள் யார் பெரியவர் என்ற மோதலில் கட்சியினரும், நிர்வாகிகளும் மிகுந்த தவிப்பில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பழைய டயலாக்கையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டிருக்கும் மாஜி அமைச்சர் மீது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரர் அணியில் உள்ள நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சரான ‘வைத்தியானவர்’ ஆரம்பத்தில் இருந்தே தனது ஆதரவாளர்களிடம் வழக்கமான டயலாக்கை சொல்லிக்கிட்டு இருக்கிறாராம்.. ஒவ்வொரு முறையும், தனது ஆதரவாளர்களிடம் ‘பொறுத்திருங்கள் நல்லதே நடக்கும்’ என கூறி வருவதை அவர் வழக்கமாக வச்சிருக்கிறாராம்.. தற்போதும் அதே டயலாக்கை தான் கூறி வருகிறாராம்..

இது வைத்தியானவரின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.. இதனால் இந்தாண்டு இறுதிக்குள் டெல்டா மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் முக்கிய முடிவை எடுக்க முடிவு செய்திருக்காங்களாம்.. அதற்கான வேலையில் அவர்கள் திரைமறைவில் இறங்கிட்டாங்களாம்.. டெல்டா மாவட்டத்தில் வைத்தியானவரின் ஆதரவாளர்களின் ஒவ்வொரு மூவ்மென்டையும் சேலத்துக்காரர் டீம் தரப்பினர் ரகசியமாக கவனித்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சுற்றுலா நகர ஓட்டல்களில் கலப்பட கறி தகவலால் அதிர்ச்சியில் இருக்காங்களாமே சுற்றுலாவாசிகள்’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிமாநிலத்தவர் படையெடுப்பது வழக்கம். இப்படி வர்றவங்க விதவிதமான உணவுகளுடன் சுற்றுலா தலங்களையும் குடும்பம் குடும்பமாக பார்வையிட்டு ரசிப்பார்கள். இதனால் வாரத்தின் கடைசி மூன்று நாட்களும் விடுதிகள் நிரம்பி உணவகங்களிலும் கிராக்கி ஏற்படுமாம்.. கள நிலவரம் இப்படியிருக்க சில ஓட்டல்களில் கலப்பட கறி பயன்படுத்தப்படுவதாக வலைதளத்தில் தகவல் பரவியதாம்.. சமீபத்தில் ஒரு அமைப்பின் தலைவர் ரயில் நிலையத்தை ஒட்டி வாக்கிங் செல்ல அங்கு ஒரு குடும்பமே மாமிசத்தை வெட்டியபடி இருந்ததாம்..

சந்தேகம் ஏற்படவே அவர் அங்கு சென்று பார்க்க நாய்களின் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கீழே கிடந்ததாம்.. கேள்வி எழுப்பிய தலைவர், அருகிலுள்ள ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தாராம்.. ஓடோடி வந்த காக்கிகள் தம்பதியை பிடித்து தீர விசாரிச்சாங்களாம்.. கலப்பட கறி தங்களுக்கானதா, ஓட்டலுக்கானதா என்பதற்கு இதுவரை விடை கிடைக்காத நிலையில் சுற்றுலாவாசிகளோ அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வீடியோ கான்பரன்சிங்கில் சமரச பேச்சுவார்த்தை தொடங்கியதும் தைலாபுரம் தோட்டத்திற்கு வரச்சொல்லுங்க என அதிரடி காட்டினாராமே தந்தை..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தந்தை -மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள விவகாரம் போகப்போக சரியாகிவிடும் என்றிருந்த நிலையில் இனிமேல் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்காம்.. கட்சிக்காரர்களை தன்னிடம் வரவிடாமல் தடுத்ததிலேயே தந்தையின் மனம் உடைந்து போச்சுதாம்.. அடுத்ததாக அவரது இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒட்டுக்கேட்பு கருவியால் ரொம்பவே ஷாக்காயிட்டாராம்..

இன்னும் அதிலிருந்து மீளாமலேயே தந்தை இருக்காராம்.. இப்படியாக தொடர்ந்து தந்தைக்கு அதிர்ச்சியை கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் பொதுக்குழுவை கூட்டினாராம் மகன். இதற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை நீதிமன்றத்தை நாடியிருக்காரு.. யாரும் எதிர்பாராத வகையில் நீதிமன்றமே தந்தையையும், மகனையும் கோர்ட்டுக்கு வாங்கன்னு உத்தரவு போட்டதுடன் நேரில் விசாரிக்கப்போவதாகவும் அறிவித்ததாம்..

அரசியல் உலகில் இது ஒரு புதுபுரட்சியாக இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டதாம்.. இது மகன் தரப்பினருக்கு ரொம்பவே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தந்தை தரப்பினருக்கு ஹேப்பி இல்லையாம்.. நேரில் வந்து இனி உங்கள் பேச்சை கேட்டு நடப்பேன் என சொல்லி பாதம் தொட்டு ஆசி வாங்கி சென்றால் அத்தனை பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.. அதே நேரத்தில் நீதிமன்ற படியில் எனது கால்படாது என்பதில் தந்தை உறுதியா இருந்தாராம்..

இதில் தோட்டத்திற்கு சமரசத்திற்கு வந்து சென்ற ரெண்டில் ஒருவர் மீது சந்தேகம் இருக்காம்.. என்றாலும் உடல்நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகாமல் வீடியோ கான்பரன்சிங்கில் தந்தை ஆஜரானாராம்.. அப்போது உங்களைப்போல தந்தை கிடைப்பதற்கு உங்கள் மகன் கொடுத்து வைக்க வேண்டும் என சமரச பேச்சுவார்த்தை தொடங்கியவுடன், அவனுடன் பேசுவதற்கு நான் தயாராக இல்லை.

தைலாபுரம் தோட்டத்துக்கு வரச்சொல்லுங்கள் என தந்தை அவருக்கே இருக்கும் தைரியத்துடன் அதிரடியா சொன்னதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதனால் கோர்ட் எடுத்த சமரச முயற்சி தோல்வியை தழுவியதாக தந்தை ஆதரவாளர்கள் சொல்றாங்க.. அதே நேரத்தில் மகன் பொதுக்குழுவை கூட்டியதால் தந்தை ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றாராம். இதனால் கட்சி ரெண்டாகிப் போயிற்று.., இனிமேல் மகன் தனக்கென ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்வது தான் சரியாக இருக்கும் எனவும் கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related News